இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர்: அரைஇறுதிக்கு ரைபகினா, ஆஸ்டாபென்கோ தகுதி


இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர்: அரைஇறுதிக்கு ரைபகினா, ஆஸ்டாபென்கோ தகுதி
x

காயம் காரணமாக போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் போட்டியில் இருந்து விலகினார்.

ரோம்,

இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து), 6-ம் நிலை வீராங்கனையான எலினா ரைபகினாவை (கஜகஸ்தான்) எதிர்கொண்டார்.

இதில் ஸ்வியாடெக் 6-2, 6-7 (3-7), 2-2 என்ற கணக்கில் இருந்த போது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் ரைபகினா அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால்இறுதியில் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பாலா படோசாவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார்.


Next Story