இத்தாலி ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி


இத்தாலி ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி
x

Image Courtesy: AFP

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

ரோம்,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் கிரேக்க முன்னணி வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ். சிலியின் நிக்கோலஸ் ஜாரி உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய சிட்சிபாஸ், 2வது செட்டை 5-7 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இதையடுத்து பரபரப்பாக நடைபெற்ற 3வது செட்டில் சிட்சிபாஸ் 4-6 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி கண்டார்.

இறுதியில் இந்த ஆட்டத்தில் சிட்சிபாஸ் 6-3, 5-7, 4-6 என்ற புள்ளிக்கணக்கில் சிலியின் நிக்கோலஸ் ஜாரியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.


Next Story