மோசல் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரில் மெத்வதேவ் தோல்வி - டென்னிஸ் ராக்கெட்டை தூக்கி எரிந்ததால் சலசலப்பு


மோசல் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரில் மெத்வதேவ் தோல்வி - டென்னிஸ் ராக்கெட்டை தூக்கி எரிந்ததால் சலசலப்பு
x
தினத்தந்தி 23 Sep 2022 5:12 PM GMT (Updated: 2022-09-23T22:46:02+05:30)

பிரான்ஸ் ரசிகர்கள் சிலர் மெத்வதேவ் தோல்வியடையும் போது அவருக்கு எதிராக சத்தங்களை எழுப்பி கேலி செய்ததாக கூறப்படுகிறது.

பாரிஸ்,

மோசல் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் பிரான்ஸ் நாட்டின் மெட்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2-ம் சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த முன்னனி வீரர் மெத்வதேவ் தோல்வியை தழுவினார். ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் வாரிங்கா உடன் மெத்வதேவ் மோதினார். இதில் 6-4, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வாரிங்கா வெற்றி பெற்று கால் இறுதிக்குள் நுழைந்தார்.

இதனிடையே பிரான்ஸ் ரசிகர்கள் சிலர் மெத்வதேவ் தோல்வியடையும் போது அவருக்கு எதிராக சத்தங்களை எழுப்பி கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் மெத்வதேவ் மைதானத்தில் தனது டென்னிஸ் ராக்கெட்டை தூக்கி எரிந்ததால், அங்கு சலசலப்பை ஏற்பட்டது.


Next Story