மியாமி ஓபன் டென்னிஸ்; நோவக் ஜோகோவிச் விலகல்


மியாமி ஓபன் டென்னிஸ்; நோவக் ஜோகோவிச் விலகல்
x

கோப்புப்படம்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.

வாஷிங்டன்,

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) விலகுவதாக நேற்று அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

வணக்கம் மியாமி. துரதிர்ஷ்டவசமாக இந்த வருடம். நான் மியாமி ஓப்பனில் விளையாட மாட்டேன். எனது தொழில் வாழ்க்கையின் இந்த கட்டத்தில், எனது தனிப்பட்ட மற்றும் தொழில் அட்டவணையை நான் சமநிலைப்படுத்துகிறேன்.

உலகில் உள்ள சில சிறந்த மற்றும் மிகவும் ஆர்வமுள்ள ரசிகர்களை நான் அனுபவிக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story