மான்டி கார்லோ டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச்


மான்டி கார்லோ டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச்
x

Image : AFP 

ரோமன் சபியுலின்யை (ரஷியா) தோற்கடித்து நோவக் ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மான்டி கார்லோ,

களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய 'நம்பர் ஒன்' வீரரும், 2 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரோமன் சபியுலின்யை (ரஷியா) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னதாக நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-3, 6-0 என்ற நேர் செட்டில் வாவ்ரிங்காவை (சுவிட்சர்லாந்து) வெளியேற்றினார். இதே போல் போலந்தின் ஹர்காக்ஸ் 6-4, 3-6, 7-6 (7-2)என்ற செட் கணக்கில் ஜாக் டிராப்பரை (இங்கிலாந்து) போராடி வென்றார்.


Next Story