மான்டேகார்லோ டென்னிஸ்: கால்இறுதியில் ரூப்லெவ்


மான்டேகார்லோ டென்னிஸ்: கால்இறுதியில் ரூப்லெவ்
x

மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.

மான்டே கார்லோ,

மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் 7-6 (7-4), 6-2 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் கச்சனோவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் தன்னை எதிர்த்த நிகோலஸ் ஜாரியை (சிலி) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். ஜன் லினர்ட் ஸ்ரப் (ஜெர்மனி), ஹோல்ஜர் ருனே (டென்மார்க்), ஜானிக் சின்னெர் (இத்தாலி) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.


Next Story