மான்டி கார்லோ டென்னிஸ்: சிட்சிபாஸ் சாம்பியன்


மான்டி கார்லோ டென்னிஸ்: சிட்சிபாஸ் சாம்பியன்
x

Image : AFP 

மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்தது

மான்டி கார்லோ,

களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்தது. இதில் நேற்று அரங்கேறிய ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், நார்வேயின் கேஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார்.

1 மணி 36 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிட்சிபாஸ் 6-1, 6-4 என்ற நேர் செட்டில் கேஸ்பர் ரூட்டை தோற்கடித்து 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். மகுடம் சூடிய சிட்சிபாசுக்கு ரூ.8¼ கோடியும், 2-வது இடம் பிடித்த கேஸ்பர் ரூட்டுக்கு ரூ.4½ கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.


Next Story