மொராக்கோ ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் பெரெட்டினி


மொராக்கோ ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் பெரெட்டினி
x

Image Courtesy: Twitter

இறுதிப்போட்டியில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி, ஸ்பெயின் வீரர் ராபர்டோவுடன் மோதினார்.

ரபாட்,

வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி, ஸ்பெயின் வீரர் ராபர்டோவுடன் மோதினார்.

இதில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெரெட்டினி 7-5, 6-2 என்ற நேர் செட்களில் ராபர்டோவை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.


Next Story