பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் காலிறுதிக்கு தகுதி


பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் காலிறுதிக்கு தகுதி
x

Image Courtesy: AFP

காலிறுதி போட்டியில் ஜோகோவிச், இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டியை எதிர்கொள்கிறார்.

பாரிஸ்,

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரிஸில் கடந்த 29-ஆம் தேதி தொடங்கியது. முதல் 2 நாட்கள் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில் கடந்த 31ஆம் தேதி முதல் முதல் சுற்று போட்டிகள் தொடங்கியது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ரவுண்டு ஆப் 16 (3-வது சுற்று) ஆட்டம் ஒன்றில் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) ரஷிய வீரரான கரேன் கச்சனோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஜோகோவிச் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். நாளை நடைபெறும் காலிறுதி போட்டியில் ஜோகோவிச், இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டியை எதிர்கொள்கிறார்.


Next Story