பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் - அரைஇறுதி சுற்றுக்கு அமெரிக்க வீரர் டாமி பால் முன்னேற்றம்


பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் - அரைஇறுதி சுற்றுக்கு அமெரிக்க வீரர் டாமி பால் முன்னேற்றம்
x

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரைஇறுதி சுற்றுக்கு அமெரிக்க வீரர் டாமி பால் முன்னேறினார்.

பாரிஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 'பாரிஸ் மாஸ்டர்ஸ்' டென்னிஸ் தொடர் கடந்த 29-ஆம் தேதி தொடங்கியது. முதல் 2 நாட்கள் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில் கடந்த 31-ந்தேதி முதல், ரவுண்டு ஆப் 62 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ரவுண்டு ஆப்-16 (3-வது சுற்று) ஆட்டத்தில், ஸ்பெயின் வீரர் பாப்லோ கரேனோ பஸ்டா உடன் அமெரிக்க வீரர் டாமி பால் மோதினார். இதில் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய டாமி பால் 6-4,6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.


Next Story