அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து சானியா மிர்சா விலகல்


அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து சானியா மிர்சா விலகல்
x

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக இந்தியாவின் முன்னணி வீராங்கனை சானியா மிர்சா அறிவித்துள்ளார்.

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வருகிற 29-ந் தேதி முதல் செப்டம்பர் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து இரட்டையர் பிரிவில் 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான இந்திய வீராங்கனை சானியா மிர்சா திடீரென விலகி இருக்கிறார். 35 வயது சானியா மிர்சா இந்த ஆண்டுடன் டென்னிசில் இருந்து விடைபெற இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்து இருந்தார். தற்போது அவர் தனது ஓய்வு முடிவையும் மாற்றி இருக்கிறார்.

இது குறித்து சானியா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், 'கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கனடாவில் நடந்த போட்டியில் விளையாடும் போது, எனது முழங்கையில் காயம் அடைந்தேன். 'ஸ்கேன்' பரிசோதனை செய்து பார்த்ததில் தசைநாரில் லேசான கிழிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. காயம் குணமடைய சில வாரங்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதால் அமெரிக்க ஓபன் போட்டியில் இருந்து விலகி உள்ளேன். இதனால் என்னுடைய ஓய்வு திட்டத்தில் சில மாற்றங்களை செய்ய உள்ளேன். இது குறித்து உங்களுக்கு விரைவில் தெரிவிப்பேன்' என்று குறிப்பிட்டுள்ளார். அனேகமாக சானியா அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபன் வரை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story