27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்தார் செரீனா வில்லியம்ஸ்..!

Image Courtesy : US Open Tennis Twitter
27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை செரீனா வில்லியம்ஸ் நிறைவு செய்தார்.
நியூயார்க்,
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.இதில்
இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று ஆட்டத்தில் ,23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டோமலஜனோவிக் ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார்.இதனால் அவர் அமெரிக்க ஓபன் போட்டியிலிருந்து வெளியேறினார்.இதனால் 27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை செரீனா வில்லியம்ஸ் நிறைவு செய்தார்.அமெரிக்க ஓபனுடன் ஓய்வு பெறுவதாக செரீனா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
Related Tags :
Next Story






