டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் சுமித் நாகல்..!


டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் சுமித் நாகல்..!
x

கோப்புப்படம் ANI

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் சுமித் நாகல் இடம்பெற்றுள்ளார்.

புதுடெல்லி,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உலக குரூப்1 சுற்றில் இந்திய அணி, நார்வேயை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நார்வேயில் செப்டம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. திவிஜ் சரண் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து சமீபத்தில் களம் திரும்பிய சுமித் நாகல் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

ரோகித் ராஜ்பால் தலைமையிலான இந்திய அணியில் ராம்குமார், பிரஜ்னேஷ் குணேஸ்வரன், சசிகுமார் முகுந்த், யுகி பாம்ப்ரி, ரோகன் போபண்ணா ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.


Next Story