விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் ஸ்விடோலினா அசத்தலான வெற்றி


விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் ஸ்விடோலினா அசத்தலான வெற்றி
x

Image Courtacy: AFP

தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இகா ஸ்விடெக்கை வீழ்த்திய எலினா ஸ்விடோலினா விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறினார்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக்கும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவும் மோதினர்.

பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் ஸ்விடோலினா முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டை இகா ஸ்வியாடெக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஸ்ட்விடோலினா கைப்பற்றினார். இதன்மூலம் ஸ்விடோலினா 7-5, 6-7 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் செக் நாட்டு வீராங்கனை மார்கெட்டா வொண்ட்ரூசோவா, அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவுடன் மோதினார். இதில் வொண்ட்ரூசோவா 6-4, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.


Next Story