டென்னிஸ் சாம்பியன்ஷிப்: போபண்ணா ஜோடி அரையிறுதி போட்டிக்கு முன்னேற்றம்


டென்னிஸ் சாம்பியன்ஷிப்: போபண்ணா ஜோடி அரையிறுதி போட்டிக்கு முன்னேற்றம்
x

Image: SAI Media

போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

துரின்,

தரவரிசையில் முதல் 8 இடம் வகிக்கும் வீரர்கள் மற்றும் ஜோடிகள் மட்டும் கலந்து கொள்ளும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இதில் வீரர்கள் 'கிரீன்', 'ரெட்', என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதினர்.

இதன் இரட்டையர் பிரிவில் (ரெட்) தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ரோகன் போபண்ணா (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி 6-4, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் வெஸ்லி கோல்ஹோப் (நெதர்லாந்து)-நீல் ஸ்குப்ஸ்கி (இங்கிலாந்து) இணையை வீழ்த்தியது.

இதனால் போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.


Next Story