இத்தாலி ஓபன்: சிட்சிபாஸ், ரூனே காலிறுதிக்கு முன்னேற்றம்


இத்தாலி ஓபன்: சிட்சிபாஸ், ரூனே காலிறுதிக்கு முன்னேற்றம்
x

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸ், ஜோகோவிச், ரூனே ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

ரோம்,

இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் இங்கிலாந்தின் கேமரூன் நோரியை விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் 6-1, 6-3 என்ற நேர்செட்டில் லாஸ்லோ ஜெரியை (செர்பியா) தோற்கடித்து கால்இறுதிக்குள் கால்பதித்தார்.

இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள டென்மார்க் வீரர் ஹோல்ஜெர் ரூனி 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் போப்ரினை (ஆஸ்திரேலியா) வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.

இன்று நடந்த மற்றொரு போட்டியில் கிரேக்க டென்னிஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் உள்ளூர் வீரர் லோரென்சோ முசெட்டியை தோற்கடித்து இத்தாலிய ஓபன் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறினார். அவர் 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் முசெட்டியை தோற்கடித்தார். காலிறுதிப்போட்டியில், அவர் தற்போதைய சின்சினாட்டி சாம்பியனான போர்னா கோரிக்கை எதிர்கொள்கிறார்.


Next Story