அமெரிக்க ஓபன் டென்னிஸ்; பென் ஷெல்டன் அரையிறுதிக்கு முன்னேற்றம்...!


அமெரிக்க ஓபன் டென்னிஸ்; பென் ஷெல்டன் அரையிறுதிக்கு முன்னேற்றம்...!
x

Image Courtesy: @usopen

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பென் ஷெல்டன் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் சக நாட்டு வீரரான பிரான்சிஸ் தியாபோவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் 6-2, 3-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் பென் ஷெல்டன், பிரான்சிஸ் தியாபோவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அரையிறுதி சுற்றில் பென் ஷெல்டன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர் கொள்கிறார்.


Next Story