அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கார்லஸ் அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கார்லஸ் அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 7 Sep 2023 8:15 PM GMT (Updated: 7 Sep 2023 8:16 PM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் மேத்யூ எப்டென் கூட்டணி 7-6 (7-3), 6-2 என்ற நேர் செட்டில் பிரான்சின் ஹெர்பெர்ட்- நிகோலஸ் மகுட் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

முன்னதாக நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் நடப்பு சாம்பியனும், தரநிலையில் முதலிடத்தில் இருப்பவருமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஒலிம்பிக் சாம்பியனும், தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ளவருமான அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) எதிர்கொண்டார்.

2 மணி 30 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 6-3, 6-2, 6-4 என்ற நேர்செட்டில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை விரட்டியடித்து தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி நேரில் பார்த்து ரசித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story