அமெரிக்க ஓபன் டென்னிஸ்; முதல் சுற்றில் கோகோ காப், வோஸ்னியாக்கி வெற்றி


அமெரிக்க ஓபன் டென்னிஸ்; முதல் சுற்றில் கோகோ காப், வோஸ்னியாக்கி வெற்றி
x

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் கோகோ காப் மற்றும் வோஸ்னியாக்கி வெற்றி பெற்றுள்ளனர்.

நியூயார்க,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதன், பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் ஜெர்மன் வீராங்கனை லாரா சீக்மண்ட் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை சீக்மண்ட் கைப்பற்றி கோகோ காப்பிற்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் எழுச்சி பெற்ற காப் கடைசி 2 செட்களையும் எளிதில் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த போட்டி முடிவில் கோகோ காப் 3-6, 6-2 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதில் நடந்த மற்றொரு போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான டென்மார்கை சேர்ந்த கரோலின் வோஸ்னியாக்கி ரஷிய வீராங்கனை டாட்டியானா பிரோசோரோவா உடன் பலபரீட்சை நடத்தினார். இதில் கரோலின் வோஸ்னியாக்கி 6-3 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.


Next Story