அமெரிக்க ஓபன் டென்னிஸ்; முதல் சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆண்டி முர்ரே வெற்றி


அமெரிக்க ஓபன் டென்னிஸ்; முதல் சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆண்டி முர்ரே வெற்றி
x

image courtesy; AFP

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குபெற்றுள்ளனர். இந்த தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை சேர்ந்த ஆண்டி முர்ரே பிரெஞ்சு வீரரான கோரெண்டின் மவுடெட் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முர்ரே 6-2 , 7-5 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

கிராண்ட்ஸ்லாம் போன்ற பெரிய தொடர்களில் முர்ரே பெற்ற 200-வது வெற்றியாக இது அமைந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் அவர் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 2-வது சுற்று ஆட்டத்தில் அவர் பல்கேரிய வீரரான கிரிகோர் டிமிட்ரோவ் உடன் பலபரீட்சை நடத்த உள்ளார்.


Next Story