அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பிரான்செஸ் டியாபோ, கோகோ காப் கால்இறுதிக்கு முன்னேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பிரான்செஸ் டியாபோ, கோகோ காப் கால்இறுதிக்கு முன்னேற்றம்
x

அமெரிக்க வீரர் டியாபோ 6-4, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்.

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் பிரான்செஸ் டியாபோ உடன் ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடா மோதினார். இதில் டியாபோ 6-4, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று கால்இறுதிக்கு முன்னேறினார்.

இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் உடன் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாகி மோதினார். இதில் கோகோ காப் 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி கால்இறுதிக்குள் நுழைந்தார்.


Next Story