அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முன்னணி வீராங்கனை எலினா ரைபாகினா வெளியேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முன்னணி வீராங்கனை எலினா ரைபாகினா வெளியேற்றம்
x

Image Courtesy : @usopen twitter

தினத்தந்தி 3 Sept 2023 6:28 AM IST (Updated: 3 Sept 2023 11:36 AM IST)
t-max-icont-min-icon

ரோமேனியா வீராங்கனை சொரானா கிறிஸ்டி, முன்னணி வீராங்கனை எலினா ரைபாகினாவை வீழ்த்தினார்.

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் முன்னணி வீராங்கனை எலினா ரைபாகினா, ரோமேனியா வீராங்கனை சொரானா கிறிஸ்டியுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 6(6)-7, 6-4 என்ற கணக்கில் எலினா ரைபாகினாவை வீழ்த்தி சொரானா கிறிஸ்டி வெற்றி பெற்றார். இந்த தோல்வியால் கடந்த ஆண்டு விம்பிள்டன் சாம்பியனான எலினா, அமெரிக்க ஓபன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.ரோமேனியா வீராங்கனை சொரானா கிறிஸ்டி, முன்னணி வீராங்கனை எலினா ரைபாகினாவை வீழ்த்தினார்.

1 More update

Next Story