விம்பிள்டன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் ஜெசிகா பெகுலா


விம்பிள்டன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் ஜெசிகா பெகுலா
x

Image Courtesy: AFP 

அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சகநாட்டவரான ஆஷ்லின் க்ரூகர் உடன் மோதினார்.

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சகநாட்டவரான ஆஷ்லின் க்ரூகர் உடன் மோதினார்.

அனுபவ வீராங்கனையான ஜெசிகா பெகுலா இந்த மோதலில் 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் ஆஷ்லின் க்ரூகரை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

1 More update

Next Story