விம்பிள்டன் டென்னிஸ் தரவரிசை பட்டியல் - அல்காரஸ், ஸ்வியாடெக் முதலிடம்


விம்பிள்டன் டென்னிஸ் தரவரிசை பட்டியல் - அல்காரஸ், ஸ்வியாடெக் முதலிடம்
x

பெண்கள் ஒற்றையரில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனான இகா ஸ்வியாடெக் ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வருகிறார்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் வருகிற 3-ந்தேதி லண்டனில் தொடங்குகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் போட்டிக்குரிய தரநிலை 32 வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படுவது வழக்கம். இதன்படி ஆண்கள் பிரிவில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரசுக்கு போட்டித் தரநிலையில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற உலக சாதனையாளரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 2-வது இடமும், டேனில் மெட்விடேவ் (ரஷியா) 3-வது இடமும், கேஸ்பர் ரூட் (நார்வே) 4-வது இடமும், சிட்சிபாஸ் (கிரீஸ்) 5-வது இடமும் பெற்றுள்ளனர்.

பெண்கள் ஒற்றையரில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனான இகா ஸ்வியாடெக் (போலந்து) 'நம்பர் ஒன்' ஆக வலம் வருகிறார். ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான அரினா சபலென்காவுக்கு (பெலாரஸ்) 2-வது இடமும், நடப்பு சாம்பியன் எலினா ரைபகினாவுக்கு (கஜகஸ்தான்) 3-வது இடமும், ஜெசிகா பெகுலாவுக்கு(அமெரிக்கா) 4-வது இடமும், கரோலின் கார்சியாவுக்கு (பிரான்ஸ்) 5-வது இடமும் வழங்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story