விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி


விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி
x

Image Courtesy : Roland-Garros Twitter 

செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றிலே தோல்வி அடைந்து வெளியேறினார்.

லண்டன்,

ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் -பிரான்ஸ் நாட்டின் ஹார்மோனி டான் ஆகியோர் மோதினர். ஒரு வருடத்திற்குப் பிறகு டென்னிஸ் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் களத்திற்கு திரும்பியதால் இந்த போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 7-5,1-6, 7-6 என்ற கணக்கில் செரீனா வில்லியம்சை வீழ்த்தி ஹார்மோனி டான் வெற்றி பெற்றார். இதனால் செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றிலே தோல்வி அடைந்து வெளியேறினார்.


Next Story