வெள்ளைநிற உடை விவகாரம்: தளர்வுகளை அறிவித்த விம்பிள்டன் டென்னிஸ்


வெள்ளைநிற உடை விவகாரம்: தளர்வுகளை அறிவித்த விம்பிள்டன் டென்னிஸ்
x

கோப்புப்படம்

வெள்ளைநிற உடை விஷயத்தில் சில தளர்வுகளை விம்பிள்டன் டென்னிஸ் போட்டி அமைப்பு அறிவித்துள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தின் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் போது வீரர், வீராங்கனைகள் வெள்ளைநிற உடை மட்டுமே அணிய வேண்டும் என்பது கட்டுப்பாடாகும். மேலும், வெள்ளை ஆடைகளை அணிவது இங்கு பாரம்பரியமாக இருந்து வருகிறது.

விம்பிள்டன் விதிகளின்படி, ஸ்கர்ட், ஷார்ட்ஸ் மற்றும் டிராக்சூட்கள் அனைத்தும் வெண்மையாக இருக்க வேண்டும். மேலும், வெள்ளை என்பது அரை வெள்ளை அல்லது கிரீம் வெள்ளை என்றால் கூட ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பளீரென்ற வெண்மைதான் ஏற்றுக்கொள்ளப்படும் .

இந்த சூழலில் மாதவிடாய் காலத்தில் வெள்ளைநிற டவுசர் (ஷாட்ஸ்) அணியும் போது சில அசவுகரியங்கள் இருப்பதாக வீராங்கனைகள் தரப்பில் அவ்வப் போது புகார் கூறப்படுவது உண்டு.

இந்த நிலையில் உடை விஷயத்தில் சில தளர்வுகளை விம்பிள்டன் டென்னிஸ் போட்டி அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி இனி விம்பிள்டனில் வீராங்கனைகள் விளையாடும் போது, தாங்கள் விரும்பிய நிறத்தில் ஷாட்ஸ்களை அணியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story