பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் சபலென்கா, கார்சியா


பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் சபலென்கா, கார்சியா
x

image courtesy: wta twitter

இந்த ஆண்டில் 5-வது முறையாக ஸ்வியாடெக்குடன் மோதிய சபலென்கா அவரை முதல்முறையாக சாய்த்துள்ளார்.

டெக்சாஸ்,

டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் போர்த் வொர்த் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, நம்பர் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக்கை (போலந்து) எதிர்கொண்டார்.

2 மணி 7 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-2, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆண்டில் 5-வது முறையாக ஸ்வியாடெக்குடன் மோதிய சபலென்கா அவரை முதல்முறையாக சாய்த்துள்ளார்.

மற்றொரு அரைஇறுதியில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் 5-வது இடத்தில் இருக்கும் மரியா சக்காரியை (கிரீஸ்) தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இறுதிப்போட்டியில் சபலென்கா, கார்சியா மோதுகிறார்கள்.


Next Story