உலக டென்னிஸ் லீக் 2023; டேனியல் மெத்வதேவ் தலைமையிலான பிபிஜி ஈகிள்ஸ் அணி சாம்பியன்..!

image courtesy; instagram/ medwed33
இறுதிப்போட்டியில் பிபிஜி ஈகிள்ஸ் மற்றும் கைட்ஸ் அணிகள் மோதின
அபுதாபி,
யுஎஸ் ஓபன் சாம்பியனான டேனியல் மெத்வதேவ் தலைமையிலான பிபிஜி ஈகிள்ஸ் அணி உலக டென்னிஸ் லீக் பட்டத்தை வென்றுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிபிஜி ஈகிள்ஸ் மற்றும் கைட்ஸ் அணிகள் மோதின. இதில் பிபிஜி ஈகிள்ஸ் 29-26 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் மெத்வதேவ்-மிர்ரா ஆண்ட்ரீவா ஜோடி 6-7 மற்றும் 5-7 என்ற செட் கணக்கில் பவுலா படோசா- சிட்சிபாஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தாலும், மற்ற பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்று பிபிஜி ஈகிள்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
Related Tags :
Next Story






