டபிள்யூடிஏ டென்னிஸ் தொடர்; இகா ஸ்வியாடெக் சாம்பியன்!


டபிள்யூடிஏ டென்னிஸ் தொடர்; இகா ஸ்வியாடெக் சாம்பியன்!
x

image courtesy;AFP

இந்த வெற்றியின் மூலம் இகா ஸ்வியாடெக் பெண்கள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார்.

மெக்சிகோ,

பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றிருந்த டபிள்யூடிஏ டென்னிஸ் தொடர் கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு போலந்து நாட்டை சேர்ந்த இகா ஸ்வியாடெக் மற்றும் அமெரிக்க வீராங்கனை பெகுலா முன்னேறினர்.

தங்களது அரையிறுதி ஆட்டங்களில் இகா ஸ்வியாடெக் - சபலென்காவையும், பெகுலா - கோகோ காப்பையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இறுதிப்போட்டியில் ஸ்வியாடெக் பெகுலாவை எளிதில் வீழ்த்தினார். 59 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் ஸ்வியாடெக் 6-1 மற்றும் 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் ஸ்வியாடெக் பெண்களுக்கான டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.


Next Story