காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2021: வெள்ளி வென்றார் பூனம் யாதவ்..!


காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2021: வெள்ளி வென்றார் பூனம் யாதவ்..!
x
தினத்தந்தி 15 Dec 2021 12:22 PM GMT (Updated: 15 Dec 2021 12:22 PM GMT)

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கன்ட் நகரில் நடந்துவரும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் பூனம் யாதவ் வெள்ளி வென்றுள்ளார்.

தாஷ்கன்ட்,

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கன்ட் நகரில் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2021 போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பெண்களுக்கான 76 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனை புனம் யாதவ் கலந்து கொண்டார். அவர் மொத்தம் 220 கிலோ (98+122) எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இதே நேரத்தில், உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியும் தாஷ்கண்டில் டிசம்பர் 17 வரை நடைபெறுகிறது. காமன்வெல்த் நாடான இந்தியா இரண்டிலும் போட்டியிடுகிறது. 220 கிலோ எடையைத் தூக்கிய புனம் யாதவ் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆரோக்கிய அலிஷ் மொத்தம் 214 கிலோ (91+123) எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். கனடா நாட்டைச் சேர்ந்த மாயா லேலர் மொத்தம் 229 (99+130) கிலோ எடையைத் தூக்கி காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியின் தங்கப் பதக்கத்தை வென்றார்.

Next Story