தந்தையானார் யுவராஜ்சிங்..!


தந்தையானார் யுவராஜ்சிங்..!
x
தினத்தந்தி 27 Jan 2022 1:19 AM IST (Updated: 27 Jan 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் - ஹாசல் தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங். 2011-ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வெல்வதில் முக்கிய பங்காற்றிய அவர் தொடர்நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

யுவராஜ்சிங், மாடல் அழகியும், நடிகையுமான ஹாசல் கீச்சை காதலித்து 2016-ம் ஆண்டில் மணந்தார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஹாசல் கீச்சுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தந்தையான மகிழ்ச்சியான தகவலை 40 வயதான யுவராஜ்சிங் டுவிட்டர் மூலம் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். 

யுவராஜ்- ஹாசல் கீச் தம்பதிக்கு முன்னாள் வீரர்கள் கங்குலி, கவுதம் கம்பீர், ஹர்பஜன்சிங், இர்பான் பதான், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Next Story