"நீ ஒரு சூப்பர் ஸ்டார்": கோலிக்கு உருக்கமான கடிதம் எழுதிய யுவராஜ் சிங்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 22 Feb 2022 4:48 PM IST (Updated: 22 Feb 2022 4:53 PM IST)
t-max-icont-min-icon

விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மொகாலி,

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். இவர் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தற்போது இந்திய அணியில் கேப்டன் பொறுப்பை துறந்து, புது உத்வேகத்துடன் விளையாடிவரும் விராட் கோலிக்கு யுவராஜ் சிங் உருக்கமான கடிதம் ஒன்றையும் பரிசு ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் யுவராஜ் சிங் கூறும்போது;

"விராட், ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு நபராகவும், உன்னுடைய வளர்ச்சியை அருகில் இருந்து நான் பார்த்துள்ளேன். ஒரு இளைஞனாக வலை பயிற்சியில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களுடன் தோளோடு தோள் நின்று, இப்போது ஒரு புதிய தலைமுறைக்கு வழிகாட்டும் ஒரு ஜாம்பவானாக உருவெடுத்துள்ளாய். களத்தில் நீ காட்டும் ஒழுக்கம், ஆர்வம், விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பு போன்றவை, நாட்டில் உள்ள ஒவ்வொரு இளம் சிறுவர்களையும் கிரிக்கெட் மட்டையை எடுக்க வைத்துள்ளதுடன், அவர்களுக்குள் ஒரு நாள் நீல நிற ஜெர்சியை அணிய வேண்டும் என்ற கனவைத் தூண்டியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட்டில் உனது தரத்தை உயர்த்தி கொண்டு வரும் நீ, ஏற்கெனவே பல்வேறு சாதனைகளை படைத்துவிட்டாய். நீ ஒரு மிகப்பெரிய கேப்டனாகவும், தலைவனாகவும் இருக்கிறாய். தற்போது வாழ்க்கையில் நீ புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது என்னை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. ஏனென்றால், இனி உன்னிடம் இருந்து வழக்கமான ரன் சேஸை எதிர்பார்க்கிறேன். ஒரு சக வீரராகவும், ஒரு நண்பராகவும் உன்னுடன் நிறைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதில் பெருமைப்படுகிறேன்.

 நீ ஒரு சூப்பர் ஸ்டார். உனக்குள் இருக்கும் நெருப்பு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கட்டும். நாட்டை தொடர்ந்து பெருமைப்படுத்து". இவ்வாறு கோலிக்கு உருக்கமான கடிதத்தை அனுப்பியுள்ள யுவராஜ் சிங், கோலிக்கு சிறப்பு வாய்ந்த கோல்டன் ஷு ஒன்றையும்  பரிசாக அனுப்பியுள்ளார். 


Next Story