இந்தியாவிற்காக டி20 போட்டியில் , அதிக விக்கெட் வீழ்த்தி சாஹல் சாதனை
இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
லக்னோ,
மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று நடைபெற்றது
இந்த போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் ஒரு விக்கெட் வீழ்த்தினார் .இதனால் இந்தியாவிற்காக சர்வதேச டி20 போட்டியில் அதிக விக்கெட் (67) எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார் யுஸ்வேந்திர சாஹல். பும்ரா (66 ) விக்கெட் எடுத்து இவருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்
Related Tags :
Next Story