உலக ரக்பி போட்டிகளில் ரஷியா மற்றும் பெலராஸ் அணிகளுக்கு இடைக்கால தடை...!


உலக ரக்பி போட்டிகளில் ரஷியா மற்றும் பெலராஸ் அணிகளுக்கு இடைக்கால தடை...!
x
தினத்தந்தி 1 March 2022 8:00 AM IST (Updated: 1 March 2022 8:00 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட ரஷியா மற்றும் பெலாரஸ் அணிகளுக்கு உலக ரக்பி நிர்வாகக் குழு இடைக்கால தடை விதித்துள்ளது.

அயர்லாந்து,

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பை அடுத்து, ரஷியா மற்றும் அதன் ஆதரவு நாடான பெலாரஸ் ஆகிய நாடுகளின் விளையாட்டு அணிகள் சர்வதேச அளவில் நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று, விளையாட்டு அமைப்புகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. 

இந்நிலையில், ரஷியா மற்றும் பெலாரசை அனைத்து சர்வதேச ரக்பி மற்றும் எல்லை தாண்டிய கிளப் ரக்பி போட்டிகளில் பங்கேற்க இடைக்கால தடை விதிக்கப்படுவதாக உலக ரக்பி நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

ரக்பியின் மதிப்புகளான ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் மரியாதை ஆகியவற்றின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் உலக ரக்பி உறுப்பினரிலிருந்து ரஷியாவை இடைநீக்கி செய்து உத்தரவிட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story