மாயாஜால சுழலால் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஷேன் வார்னே காலமானார்


மாயாஜால சுழலால் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஷேன் வார்னே காலமானார்
x
தினத்தந்தி 4 March 2022 8:50 PM IST (Updated: 4 March 2022 8:50 PM IST)
t-max-icont-min-icon

ஷேன் வார்னே மாரடைப்பு காரணமாக தனது 52 வயதில் இன்று காலமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாங்காக் ,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக விளங்கியவர் ஷேன் வார்னே. இவர் மாரடைப்பு காரணமாக தனது 52 வயதில் இன்று காலமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இவர் 1969 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் பிறந்தவர். சிறு வயது முதலே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டு விளங்கினார்.

சுழற்பந்து கிவீச்சாளராக தனது பயணத்தை தொடங்கிய இவர் 1992 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அதை தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த தொடரில் ஒரு நாள் போட்டியில் முதன் முதலாக களமிறங்கினார்.

1993 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு வார்னே தேர்ந்தெடுக்கப்பட்டார். 6 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் இவர் ஒட்டு மொத்தமாக 34 விக்கெட்களை கைப்பற்றி உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தி ஈர்த்தார்.

ஷேன் வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் 708- விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா போன்ற உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியுள்ளார்.

2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஷேன் வார்னே ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்தது.

2007 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து  ஓய்வு பெற்ற இவர் 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கிய ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த தொடரில் ராஜஸ்தான் அணியை சிறப்பாக வழிநடத்திய இவர் இறுதி போட்டியில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இலங்கை அணியின் முரளிதரன்-க்கு அடுத்ததாக ஷேன் வார்னே உள்ளார். அது மட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10 முறை இவர் 10 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

Next Story