ஷேன் வார்னே மறைவிற்கு இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து இரங்கல்!
ஷேன் வார்னே மற்றும் ரோட் மார்ஷ் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, இந்திய அணி வீரர்கள் 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
மொகாலி,
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 52 வயது சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு பங்களாவில் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, நேற்று மாரடைப்பு காரணமாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரோட் மார்ஷ் உயிரிழந்தார்.
ஒரே நாளில் இரு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தது, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் மறைந்த ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்ன் மற்றும் ரோட் மார்ஷ் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் இந்திய அணி வீரர்கள் 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
மேலும் இந்திய அணி வீரர்கள் இன்றைய நாள் ஆட்டத்தில் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். இந்த தகவலை பி சி சி ஐ தெரிவித்தது.
Related Tags :
Next Story