லியோன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் உக்ரைனின் யாஸ்ட்ரெம்ஸ்கா..!


லியோன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் உக்ரைனின் யாஸ்ட்ரெம்ஸ்கா..!
x
தினத்தந்தி 5 March 2022 9:51 PM GMT (Updated: 5 March 2022 9:51 PM GMT)

ருமேனிய இரண்டாம் நிலை வீராங்கனையான சொரானா சிர்ஸ்டியாவை அரை இறுதிப் பேட்டியில் லியோன் தோற்கடித்தார்.

பிரான்ஸ்,

உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மாதம் 24-ந்தேதி அந்த நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்தது. உக்ரைன் மீதான ரஷியாவின் உக்கிரமான போர் நேற்று 10-வது நாளை எட்டியது. 

இந்நிலையில் உக்ரைனின் துறைமுக நகரமான ஒடெசாவில் நடந்த தாக்குதலின் போது உக்ரேனிய டென்னிஸ் வீராங்கனையான தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா மற்றும் அவரது குடும்பத்தினரும் ரஷிய வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்ப நிலத்தடி கார் பார்க்கிங்கில் இரண்டு இரவுகள் தங்கியிருந்தனர்.

அதன் பின் அவரது தந்தையும் தாயிடமிருந்து விடைபெற்ற யாஸ்ட்ரெம்ஸ்கா மற்றும் அவளது 15 வயது சகோதரி இவானா, டானூபை படகில் கடந்து ருமேனியாவை அடைந்தனர். பின் அங்கிருந்து பிரான்சை அடைந்தார்.

இதை தொடர்ந்து, 21 வயதான உக்ரைனின் யாஸ்ட்ரெம்ஸ்கா, உக்ரைன் கொடியை தோளில் அணிந்து கொண்டு வந்த அவர், தனது நாட்டின் நீலம் மற்றும் மஞ்சள் நிற உடையுடன் விளையாடினார். ருமேனிய இரண்டாம் நிலை வீராங்கனையான சொரானா சிர்ஸ்டியாவை அரை இறுதிப் பேட்டியில் 7-6 (7/5), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். 

இந்த வெற்றியின் மூலம் லியோன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு யாஸ்ட்ரெம்ஸ்கா முன்னேறியுள்ளார்.

Next Story