இந்தியன் வெல்ஸ் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் பங்கேற்கமாட்டார்..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 March 2022 11:54 PM GMT (Updated: 9 March 2022 11:54 PM GMT)

இந்தியன் வெல்ஸில் விளையாடுவதற்காக அமெரிக்கா செல்லப் போவதில்லை என்பதை நோவக் ஜோகோவிச் உறுதிப்படுத்தியுள்ளார்.

பெல்கிரேட்,
 
செர்பிய டென்னிஸ் சூப்பர் ஸ்டார் நோவக் ஜோகோவிச் இரண்டு வாரங்களுக்கு முன்பு துபாயில், இந்தியன் வெல்ஸில் விளையாடுவதற்கு அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவரின் பெயர் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் போட்டி மெயின் டிராவில் இடம் பெற்றது, இது அவரது ரசிகர்களுக்கிடையே குழப்பத்திற்கு வழிவகுத்தது.

தற்போது இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் நோவக் ஜோகோவிச் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், ஜோகோவிச் பிபிசியிடம் தடுப்பூசி போடவில்லை என்பதை உறுதிப்படுத்தினார், மேலும் தான் எப்போதும் எல்லோருடைய விருப்பங்களையும் மதிக்க முயற்சித்ததாகவும், தன்னுடையதையும் மக்கள் மதிப்பார்கள் என நம்புவதாக தெளிவுபடுத்தினார்.

ஜோகோவிச் ஐந்து முறை இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story