ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் லக்சயா சென்!
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பர்மிங்காம் நகரில் நடைபெற்றுவருகிறது.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பர்மிங்காம் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியாவின் லக்சயா சென் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்
காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் லு குவாங்குடன் லக்சயா சென் மோதுவதாக இருந்தது. ஆனால், சீன வீரர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் லக்சயா சென் போட்டியின்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், நடப்பு சாம்பியனான மலேசியாவின் லீ ஜி ஜியாவை எதிர்கொண்டார்.
லக்சயா சென்னுக்கு மிகவும் சவாலாக இருந்த இந்த போட்டி சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது. இறுதியில் 21-13 12-21 21-19 என்ற செட் கணக்கில் லீ ஜி ஜியாவை வீழ்த்தினார்.
India’s Lakshya Sen beats defending champion Lee Zii Jia of Malaysia 21-13 12-21 21-19 to enter the men’s singles final of All England Badminton Championship 2022
— ANI (@ANI) March 19, 2022
(file photo) pic.twitter.com/efJIQce2tC
Related Tags :
Next Story