ஐதராபாத்-ராஜஸ்தான் இன்று மோதல்
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
புனே,
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணியில் கிளைன் பிலிப்ஸ், நிகோலஸ் பூரன், பிரியம் கார்க், ராகுல் திரிபாதி, ரவிகுமார் சமார்த் ஆகியோர் பேட்டிங்கில் பிரகாசிக்ககூடியவர்கள். வேகப்பந்து வீச்சில் அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர்குமார், ‘யார்க்கர்’ வீசுவதில் கில்லாடியான டி.நடராஜன், இளம் அதிவேக பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் எதிரணிக்கு சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ராஜஸ்தான் அணியை பொறுத்தமட்டில் பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். சஞ்சு சாம்சன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். வேகப்பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், பிரசித் கிருஷ்ணா, நவ்தீப் சைனியும், சுழற்பந்து வீச்சில் ஆர்.அஸ்வின், யுஸ்வேந்திர சாஹலும் உள்ளனர். இரண்டு அணிகளும் போட்டியை வெற்றியுடன் தொடங்க கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 8-ல் ஐதராபாத்தும், 7-ல் ராஜஸ்தானும் வெற்றி பெற்று இருக்கின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போரட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Related Tags :
Next Story