மியாமி ஓபன் டென்னிஸ்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் நவோமி ஒசாகா
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மியாமி,
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டத்தில், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் டேனியலி காலின்சை தோற்கடித்து முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார்.
அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற அரைஇறுதி சுற்றில் ஒசாகா, ஒலிம்பிக் சாம்பியனான பெலின்டா பென்சிச்சை (சுவிட்சர்லாந்து) சந்தித்தார். இதில் முதல் செட்டில் பெலின்டா (6-4) முன்னிலை வகித்தார். இதையடுத்து 2-வது மற்றும் 3-வது செட்களில் நவோமி ஒசாகா (6-3), (6-4) முன்னிலை பெற்று 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக நவோமி ஒசாகா முன்னேறியுள்ளார்.
Related Tags :
Next Story