"மீண்டும் கேப்டனை சந்தித்ததில் மகிழ்ச்சி"- டோனி குறித்த கம்பீரின் பதிவால் நெகிழ்ந்த கிரிக்கெட் ரசிகர்கள்..!!
டோனி குறித்த கவுதம் கம்பீரின் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர். இவர் நீண்ட காலம் தோனி கேப்டனாக இருந்தபோது இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இந்தியாவின் இரண்டு உலக கோப்பை தொடர்களிலும் இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கம்பீர் ஓய்வை அறிவித்த பிறகு டோனிக்கும் கவுதம் கம்பீருக்கும் மோதல்கள் இருப்பதாகவும், கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் பல நேரங்களில் வதந்திகள் வெளிவந்துள்ளன.
இருப்பினும் சமீபத்தில் "வாழ்க்கையில் எப்போதாவது டோனிக்கு உதவி தேவைப்பட்டால் அவருக்காக நான்தான் முதலில் நிற்பேன். ஏனெனில் ஒரு கிரிக்கெட் வீரராகவும் ஒரு மனிதராகவும் அவர் நிறைய செய்திருக்கிறார்" என கம்பீர் தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.
போட்டி முடிந்த பிறகு சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் லக்னோ அணியின் ஆலோகர் கவுதம் கம்பீரும் சந்தித்து பேசிக் கொண்டனர். இருவரும் சிரித்துக்கொண்டே பேசிய புகைப்படம் இணையத்தை ஆக்கிரமித்தது.
பின்னர் இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவுதம் கம்பீர் " மீண்டும் கேப்டனை சந்தித்ததில் மகிழ்ச்சி " என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவானது தற்போது சமுகவலைத்தலைங்களில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story