ஐஸ்லாந்து ரெய்க்விக் ஓபன் செஸ் தொடர் - சாம்பியன் பட்டம் வென்ற தமிழக இளம் வீரர்


ஐஸ்லாந்து ரெய்க்விக் ஓபன் செஸ் தொடர் - சாம்பியன் பட்டம் வென்ற தமிழக இளம் வீரர்
x
தினத்தந்தி 13 April 2022 8:15 PM IST (Updated: 13 April 2022 8:15 PM IST)
t-max-icont-min-icon

9 சுற்றுகளாக நடந்த போட்டியில் ஒரு சுற்றில் கூட பிரக்ஞானந்தா தோல்வி அடையவில்லை.

ரெய்க்விக்,

ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர் ரெய்க்விக்கில் நடைபெற்ற ஓபன் செஸ் தொடர் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 9 சுற்றுகளாக நடந்த இந்த செஸ் தொடரில் ஒரு சுற்றில் கூட தோல்வி அடையாமல், மொத்தம் 7.5 புள்ளிகள் பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார்.

சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரரான பிரக்ஞானந்தா கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில், உலகச் சாம்பியனும், நம்பர் ஒன் செஸ் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு வெற்றி பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது. 

Next Story