கால்பந்தாட்ட ஜாம்பவான் ரொனால்டோவின் மகன் உயிரிழப்பு - கண்ணீர் மல்க வேண்டுகோள்
நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஆண்குழந்தை இறந்துவிட்டதாக ரொனால்டோ இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.
புதுடெல்லி
கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். ஒரு ஜோடி இரட்டை குழந்தைகள் ஆவார்கள்.
கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். ஒரு ஜோடி இரட்டை குழந்தைகள் ஆவார்கள்.
இந்நிலையில், அடுத்தபடியாக இரட்டை குழந்தைகளுக்கு காத்திருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ரொனால்டோ அறிவிப்பு வெளியிட்டார்.
இதனிடையே தற்போது ரொனால்டோ தனது மனைவி ஜியோர்ஜியா கையெழுத்துடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "இந்த நாள் எங்களுக்கு மிகவும் வருத்தமான நாள். எங்களின் ஆண் குழந்தை இயற்கை எய்தி விட்டான். ஒரு பெற்றோராக இந்த மரணத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எங்களுக்கு பிறந்துள்ள மகள் அந்த மரணத்தை ஏற்றுக் கொள்ளும் வகையிலான தைரியத்தை கொடுக்கிறார் என்றாலும், ஒரு பெற்றோராக ஒரு குழந்தையை தவிர்க்க விட முடியவில்லை.
மேலும், மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், பிற மருத்துவ பணியாளர்களுக்கும் எங்களது நன்றிகள். நாங்கள் இந்த சூழலில் தனிமையாக இருக்க விரும்புகிறோம்.
அந்த ஆண் குழந்தையும் எங்களுக்கு தேவதையே. நாங்களும் அவரை மிகவும் காதலிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.இதனால் ரொனால்டோவின் ஆண் குழந்தை இறந்திருப்பது உறுதியாகிவிட்டது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
— Cristiano Ronaldo (@Cristiano) April 18, 2022
Related Tags :
Next Story