போர்ப்ஸ் மதிப்புமிக்க ஐபிஎல் அணிகள் பட்டியல்: முதல் இடத்தில் மும்பை, சென்னைக்கு 2-வது இடம்..!
ஐபிஎல் அணிகளின் விலை மதிப்பு பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மும்பை,
ஐபிஎல் 15-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 முறை நடந்துள்ள ஐபிஎல் ஐபிஎல் தொடரில் சென்னை அணி 4 முறையும் மும்பை அணி அதிகபட்சமாக 5 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள சென்னை , மும்பை அணிகள் நடப்பு சீசனில் புள்ளிபட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளனர். அதிலும் குறிப்பாக மும்பை அணி விளையாடியுள்ள 8 போட்டிகளிலும் தோல்வி அடைந்து மோசமான சாதனையை படைத்துள்ளது.
2 அணிகளும் மோசமாக விளையாடினாலும் 2 அணிகளின் மதிப்பும் குறையவில்லை. ஐபிஎல் அணிகளின் விலை மதிப்பு பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் அதிக விலை மதிப்பு கொண்ட பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் ரூ. 9962 கோடி ரூபாய் உடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை ரூ. 8811 கோடி ரூபாயுடன் 2வது இடத்தில் உள்ளது.
கொல்கத்தா அணி ரூ. 8428 கோடி ருபாயுடன் 3வது இடத்திலும், லக்னோ அணி ரூ. 8236 கோடியுடன் 4-வது இடத்திலும் உள்ளது.
இந்த அணிகளை தொடர்ந்து டெல்லி அணி ரூ. 7930 கோடியுடன் 5வது இடத்திலும், பெங்களூரு ரூ.7853 கோடியுடன் 6வது இடத்திலும் உள்ளது. ராஜஸ்தான் அணி ரூ.7662 கோடியுடன் 7வது இடத்திலும், ஐதராபாத் அணி ரூ.7432 கோடியுடன் 8வது இடத்திலும் உள்ளது. பஞ்சாப் அணி ரூ.7087 கோடியுடன் 9வது இடத்திலும், குஜராத அணி ரூ.6512 கோடியுடன் 10வது இடத்திலும் உள்ளது.
Related Tags :
Next Story