பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மகனுடன் கால்பந்து விளையாடிய ரிஷாப் பண்ட் : வைரலாகும் வீடியோ
ரிஷாப் பண்ட் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் மகனுடன் கால்பந்து விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
மும்பை,
15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டெல்லி அணி விளையாடியுள்ள 9 போட்டிகளில் 4 வெற்றி ,5 தோல்வி என புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது .
இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி -ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன .
இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் மகனுடன் கால்பந்து விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரிஷாப் பண்ட் , ரிக்கி பாண்டிங்கின் மகனுடன் கால்பந்து விளையாடும் வீடியோவை டெல்லி அணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. .
Just two friends vibing over football ⚽💙
— Delhi Capitals (@DelhiCapitals) May 4, 2022
We can't get enough of #RP17 and Fletcher Ponting playing together 🤗#YehHaiNayiDilli | #IPL2022#TATAIPL | #IPL | #DelhiCapitals | @RishabhPant17pic.twitter.com/q4TMKpEvwh
Related Tags :
Next Story