நடப்பு ஐபிஎல் தொடரில் 3-வது முறையாக முதல் பந்திலே டக் அவுட்டான கோலி- ரசிகர்கள் ஏமாற்றம்


Image Courtesy : Twitter
x
Image Courtesy : Twitter
தினத்தந்தி 8 May 2022 10:43 AM GMT (Updated: 2022-05-08T16:13:57+05:30)

3-வது முறையாக நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி கோல்டன் டக் அவுட்டாகி உள்ளார்.

மும்பை,

15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 54-வது லீக் ஆட்டத்தில்  டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதி வருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி, ஐதராபத் அணி முதலில் பந்துவீச்சை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக டூ பிளசிஸ் - விராட் கோலி களமிறங்கினர். நடப்பு தொடரில் மோசமான பேட்டிங் ஃபார்ம்-யில் இருக்கும் கோலி இந்த போட்டியில் முதல் பந்திலே டக் அவுட்டாகி வெளியேறினார்.

ஐதராபாத் பந்துவீச்சாளர் சுசித் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் வில்லியம்சன்-யிடம் கேட்ச் கொடுத்து கோலி ஆட்டமிழந்தார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 3-வது முறையாக அவர் கோல்டன் டக் (முதல் பந்தில் )அவுட்டாகி உள்ளார்.

இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 216 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

Next Story