இன்றைய ராசிபலன் - 08.09.2024


Today Rasi Palan - 08.09.2024
x

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆவணி மாதம் 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 01.58 வரை சுவாதி பின்பு விசாகம்.

திதி: இன்று மாலை 5.15 வரை பஞ்சமி பின்பு சஷ்டி

யோகம்: சித்த, மரண யோகம்

நல்ல நேரம் காலை: 07.45 - 08.45

நல்ல நேரம் மாலை: 03.15 - 4.15

ராகு காலம் மாலை: 04.30 - 6.00

எமகண்டம் மாலை: 12.00 - 1.30

குளிகை மாலை: 03.00 - 4.30

கௌரி நல்ல நேரம் காலை: 10.45 - 11.45

கௌரி நல்ல நேரம் மாலை: 1.30 - 2.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி

இன்றைய ராசிபலன்:

மேஷம்

மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் கொள்வர். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். காதலர்கள் சிந்திப்பது நல்லது. தம்பதிகளிடையே வாக்குவாதம் ஏற்படும். பின்பு சமரசமாவர்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம்

ரிஷபம்

எதிர்பாராத திடீர் சந்திப்பு நிகழும். அது தங்களுக்கு ஆனந்தத்தைத் தரும். பணம் பலவழிகளில் கிட்டும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் கொள்வர்.காதலர்கள் பொறுப்புணர்வர். வியாபாரத்தில் தாங்கள் நினைத்ததற்கும் மேலாக லாபம் ஏற்படும். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

மிதுனம்

பிள்ளைகளிடம் அனுசரித்து போவது நல்லது. அவர்களிடம் சற்று தட்டிக்கொடுத்து அவர்கள் வழியாகவே செல்வது நல்லது. பணப்புழக்கம் அதிகரிக்கும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். தேகம் மினுமினுக்கும். அரசு உத்யோகஸ்தர்களுக்கு கூடுதல் வருவாய் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்

பிள்ளைகள் பெற்றோரை மதிப்பர். வழக்கு சாதகமாக முடியும். அரசு டென்டர்களில் தங்களுக்கு சாதகமாக முடியும். அறுவை சிகிட்சையின்றி மருந்து மாத்திரைகளிலேயே உடல் நலம் தேறும். உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் கூடும். வியாபாரிகளின் தேவை பூர்த்தியடையும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

சிம்மம்

உறவினர்கள் வீட்டிற்கு வந்து போவர். வழக்குகளில் திருப்பம் ஏற்படும். உத்யோகஸ்தர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். தந்தைவழியில் ஆதரவுப் பெருகும். திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். பெண்பிள்ளைகள் பெற்றோரை மதிப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி

திட்டமிட்ட வேலைகள் தள்ளிப் போகும். மனம் தளர வேண்டாம். பொறுமை அவசியம். தங்கள் பிள்ளைகளின் படிப்பிற்காக ஒரு தொகையை டெபாசிட் செய்வீர்கள். குடும்பத் தலைவிகள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று வர வேண்டிய சூழல் உண்டாகும். வியாபாரத்தில் தொய்வு ஏற்படாது. உடலில் அசதி தோன்றும்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

துலாம்

வயதானவர்கள் வெளியே உண்பதை தவிர்த்து வீட்டு உணவை உட்கொள்வது நல்லது. உத்யோகஸ்தர்கள் மற்றவர்களின் விடுமுறையால் தாங்கள் அந்த சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பிரபலங்கள் நண்பராவர். அவர்களால் பெரிய உதவிகள் கிடைக்கும். பெரியர்களின் ஆசி கிட்டும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்பட்டுநிறம்

விருச்சிகம்

பெரியவர்கள் வெளியே செல்லும் போது மற்றவர்கள் துணையின்றி செல்வதை தவிர்ப்பது நல்லது. கணினித் துறையில் உள்ளவர்கள் தங்கள் வேலையில் நல்ல ஆர்டர்கள் கிடைக்கும். மூத்த சகோதரர் மூலம் தங்களுக்கு நன்மை விளையும். விவசாயிகளின் கனவு நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

தனுசு

இளைஞர்களுக்கு தேவையற்ற சிந்தனை வந்தால் அதனை தவிர்ப்பது நல்லது. மற்ற ஆக்கபூர்வமான வேலைகளில் ஆர்வத்தை செலுத்தவும். குடும்பத் தலைவிகள் வெளியில் செல்வதை தவிர்ப்பீர்கள். தங்கள் வேலைகளை தொலைபேசி வாயிலாகவே முடித்துக் கொள்வீர்கள். தம்பதிகளிடையே அன்யோன்யம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மகரம்

கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்து போகும். இருப்பினும் பிரிவினைக்கு இடமில்லை. விட்டுக்கொடுப்பது அவசியம். இந்நாள் முக்கியமான காரியங்களை முடிக்கும் நாளாக அமையும். புரிந்து கொள்ளாமல் பிரிந்த நண்பர்கள் இனி கை கோர்ப்பர். சகோதர வழி உறவு மேம்படும். வியாபாரம் செழிப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கும்பம்

வியாபாரிகள் தங்களின் அதிக விற்பனைக்காக புதிய வியாபார திட்டங்கள் தீட்டுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். தம்பதிகளுக்கு ஒற்றுமை குறையாது. ஒரு முறைக்கு இரு முறைப் படிப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த தங்களின் பிள்ளையின் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

மீனம்

பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்


Next Story