2022 ஆம் ஆண்டின் சிறந்த பெண் தொழில்முனைவோருக்கான விருது பெற்ற டாக்டர்.லீமா ரோஸ் மார்ட்டின்
ஊருணிநீர்நிறைந்தற்றேஉலகவாம்
பேரறிவாளன்திரு.
திருக்குறள் : 215
உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்துசெயற்படும் பேர்அறிவாளனின்செல்வம், நீர்நிறைந்தஊருணிஎல்லார்க்கும்உதவுவதுபோலபயனுள்ளதாகஇருக்கும்.
கோவை, திமார்டின் குரூப் நிறுவனத்தின் டைரக்டர்,
மார்டின்ஹோமியோபதிமருத்துவக்கல்லூரிமற்றும்மருத்துவமனையின்தாளாளர், ரோட்டரி கிளப்ஆஃப்கோயம்புத்தூர் ஆக்ருதியின் (Arch Clump Society)AKS Member, இண்டர்நேஷனல்சர்விஸ்,
இந்தியாவின் முதல் இரண்டாம் நிலை AKS Member கோவை ஆலம், ஆயுர் வேதிக் சென்டரின் டைரக்டர் என்று பல்வேறு பரிணாமங்களில் மக்கள் சேவை செய்துவரும், Rotarian.AKS.Dr.லீமாரோஸ்மார்டின் அவர்கள், வேறுபாடு பார்க்காமல் மக்களையும் மனிதநேயத்தையும் மட்டுமே பார்த்து பெருமளவில் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.
தேவைப்படும் மக்களுக்கு உதவியாக இருக்கு போது கிடைக்கும் மகிழ்ச்சி அளவிடமுடியாதது. ஒரு சிறிய உதவிஅவர்களின் குடும்பத்திற்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத்தருகிறது என்பதைஉணர்ந்த அவர் கொரோனா காலங்களில் வேலை இன்றி தவித்த மக்களுக்கு உணவுப் பொருட்கள்,தமதுநிறுவனத்தின் ஹோமியோபதி கல்லூரியிலிருந்து இலவசஹோமியோபதி தடுப்புமருந்துகள் ஆகியவற்றை மக்களுக்கு வழங்கினார்.
பெண்கள் சுயதொழில் ஒன்றை கற்று அதன் மூலம் தங்கள் குடும்ப வருமானத்தைபெற்றுக் கொள்ளவேண்டும் என்றநோக்கத்தில் தமது மார்டின் நிறுவனத்தின் சார்பாக கோவையில் செஞ்சோலை இலவச தையல் பயிற்சி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி, அதன் மூலமாக பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளித்து, பயிற்சி முடித்த பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் ஒன்றை வழங்கிவருகிறார்.
இராமநாதபுரம் மாவட்டம், திருவடிமிதியூர் கிராமத்தில், கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட, மெழுகுவர்த்தி, நாப்கின், பாக்குமரத்தட்டுக்கள், தயாரிப்புகுறித்தும், கோவை பகுதிகளில் தேனிக்கள் வளர்ப்பு, கால் நடைவளர்ப்பு, சிறுதானியங்கள், கோழி, முயல்வளர்ப்பு, மூலிகைமரங்கள்வளர்ப்பு, ஆகியவற்றை ஊக்குவித்து மக்களுக்குஉதவியும் வருவதன் மூலம் அவர்களிடையே சுயதொழில் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.
கோவை சூலூரை மையமாக கொண்டு பெஸ்ட்&கோ என்றமகளீர் கபடி குழுவை முன்னின்று நடத்திவருகிறார். இதன்மூலம் வறுமை கோட்டில் வாழும் மாணவிகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் அவர்களின் உணவு செலவுகளையும் வழங்கிக படி போட்டிகளை நடத்தி,கபடி வீராங்கனைகளைஉருவாக்குவதன்மூலம் அவர்கள் பல்வேறு அரசுத்துறைகளில் பணிவாய்ப்புகளையும் பெற்று பொருளாதாரத்தில் அவர்கள் முன்னேற உதவிவருகிறார். வீராங்கனைகளின்மேற்கல்விக்கும்உதவிவருகிறார்.
பல்வேறு பொதுசேவைகளில் ஈடுபட்டு வரும் இவரது மார்டின் குரூப்நிறுவனம் ஒரு புதிய முயற்சியாக கோவை கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை தத்தெடுத்து ரூபாய் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட்கிளாஸ், கம்ப்யூட்டர்லேப், சயின்ஸ்லேப், பிளேகிரவுண்ட், கிச்சன், டைனிங்க்ஏரியா,டாய்லட்ஆகியவற்றை புதிதாக கட்டிகொடுத்தும் பழையகட்டிடம் மற்றும் வகுப்பறைகளை சீரமைத்து கொடுத்தும் பள்ளி குழந்தைகளின் கல்விக்காக பெரிதும் உதவியிருக்கிறார்கள்.
• கணவனை இழந்த ஏழை பெண்களுக்கு இலவச குடியிருப்பு
• ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி
• ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வளர்ச்சி திட்டங்கள்
• ஆதரவற்ற முதியோர்களுக்கு நலதிட்டங்கள், மருத்துவஉதவி
• மூலிகை மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்துதல்
• இயற்கையை பாதுகாக்க மரம் நடுதல் போன்றவை
கடந்த 25 ஆண்டுகளாய் தொடர்ந்து மக்களின் நலனுக்காக செயல்படுத்தபட்டு வரும் திட்டங்கள் ஆகும் மக்களுக்காக சேவை செய்வதன் மூலம் மிகுந்த வலிமையும் மக்களிடம் இருந்து பேராதரவும் பெற்றுவருகிறார். அவரது முழுகவனம் அடிப்படைக் கல்வி மற்றும் சமூக மேம்பாடு குறித்ததாகும். அவரது குறிக்கோள் "மனிதகுலத்திற்கு சேவைசெய்யபிறந்தது" என்பதுதான். மற்றும்நாட்கள் செல்ல செல்ல சேவை செய்வது அவரின் வழக்கமான பொழுது போக்காகமாறிவிட்டது. இது போன்ற சேவைகளைச் செய்வதன் மூலம் மனநிறைவும், மேலும் அறியப்படாத மனிதர்களிடமிருந்து ஒவ்வொரு நாளும் அதிக ஆசீர்வாதங்களைப் பெற்றுவருகிறார்.