துபாயில் இந்திய சொத்து முதலீட்டு திருவிழா, பிப்ரவரி 24,25 ந் தேதிகளில் நடக்கிறது


துபாயில் இந்திய சொத்து முதலீட்டு திருவிழா, பிப்ரவரி 24,25 ந் தேதிகளில் நடக்கிறது
x
தினத்தந்தி 21 Feb 2024 1:47 PM GMT (Updated: 21 Feb 2024 2:25 PM GMT)

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு முதலீடு செய்ய சரியான தருணம் துபாயில் என்.ஆர்.ஐ ஒன் வழங்கும் மாபெரும் இந்திய ரியல் எஸ்டேட் கண்காட்சி பிப்ரவரி 24,25 ந் தேதிகளில் நடக்கிறது

இந்தியாவில் வளர்ந்து வரும் ஆற்றல்மிக்க துறையில் முதலீடு செய்வதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் கவனம் திரும்பி வருகிறது.

அந்த வகையில் அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய சொத்து முதலீட்டு திருவிழாவாக என்.ஆர்.ஐ ஒன் நிறுவனத்தின் மாபெரும் இந்திய ரியல் எஸ்டேட் கண்காட்சியானது துபாயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

40 க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்...

இந்த கண்காட்சி இந்தியாவில் உங்கள் கனவு இல்லத்தை புதிதாக கட்டுவதற்கு தேவையான அனைத்து செயல்முறைகளுக்கும் ஒரே குடையின் கீழ் வாய்ப்புகளை வழங்குகிறது.

தாயகத்தில் உங்கள் சொந்த ஊருக்கு அருகில் உள்ள கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் விற்பனையாளர்களை நீங்கள் அறிந்து கொள்ள பயனுள்ளதாக உள்ளது.

துபாயில் வரும் பிப்ரவரி 24 மற்றும் 25 தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பர்துபாய் பகுதியில் உள்ள ஹாலிடே இண்டர்நேஷனல் ஹோட்டல் வளாகத்தில் உள்ள அல் மஹா பால்ரூமில் இந்த கண்காட்சி நடக்கிறது. இதனை இலவசமாக கலந்துகொண்டு பார்வையிடலாம். மேலும் https://ipif.in/dubai?cstm_ppc_campaign=DailyThanthi என்ற இணையதள முகவரியில் முன்பதிவும் செய்து கொள்ளலாம். வாட்ஸ் அப்பில் +91 9986290007 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம்.

இதில் இந்தியாவில் இருந்து வரும் 40 க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்கள் அரங்குகளை அமைத்துள்ளன.

ரியல் எஸ்டேட் சொத்துகளில் முதலீடு....

குறிப்பாக பெரும் வளர்ச்சியடைந்து வரும் மும்பை, புனே, டெல்லி, கோவா, சூரத், பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, கோயம்புத்தூர் கொச்சி, பரிதாபாத், நொய்டா, குருகிராம், ஜெய்பூர், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீட்டு மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களாக்கள் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் சொத்துகள் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த நகரங்களில் வாடகை வருமானம் உயர்வது மட்டுமல்லாமல் சொத்தின் மதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை.

இந்த மாபெரும் இந்திய ரியல் எஸ்டேட் கண்காட்சிக்கு முதலில் வருகை புரியும் 100 ஜோடி பார்வையாளர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் 100 திர்ஹாம் மதிப்புள்ள கேரிஃபோர் ஹைப்பர் மார்க்கெட்டின் பரிசுக்கூப்பன் வழங்கப்படுகிறது. கூடுதலாக சிசிஎல் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்களும் வழங்கப்படுகிறது.

எதிர்கால சேமிப்பை வலுப்படுத்துங்கள்....

கலந்துகொள்ளும் பார்வையாளர்களுக்கு சொத்துகள் காட்சிப்படுத்தப்பட்டு அதனை வாங்குவதற்கும், பதிவு செய்வதற்கும் தேவையான வழிகாட்டுதல்களும் நிபுணர்கள் உதவியுடன் வழங்கப்படுகிறது. மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ரியல் எஸ்டேட் துறையில் என்னென்ன முதலீட்டு வாய்ப்புகள் உள்ளது? அவர்கள் எவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்? என்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களும் தரப்படுகிறது.

எனவே இந்த சிறந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில் சொத்துக்களை வாங்கி முதலீடு செய்து கூடுதல் வருவாய் மற்றும் எதிர்கால சேமிப்பை வலுப்படுத்தலாம். துபாயில் என்.ஆர்.ஐ ஒன் சார்பில் நடைபெறும் இந்த மாபெரும் ரியல் எஸ்டேட் கண்காட்சிக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

இந்தியாவை நோக்கி நகர்கிறது....

முதலீட்டு கண்ணோட்டத்தில் ரியல் எஸ்டேட்டில் சொத்துக்களை வாங்குவது பாரம்பரியமாக, பாதுகாப்பான மற்றும் நீண்டகால சிறந்த முதலீடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது குடும்பத்திற்கான பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த வகையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய வணிகங்களில் ரியல் எஸ்டேட் துறையும் ஒன்றாகும்.

கடந்த ஆண்டில் இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வது 37 சதவீதம் உயர்ந்துள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இயல்பாகவே அவர்களது முதலீட்டு பார்வை இந்தியாவை நோக்கி நகர்கிறது.

நடப்பு ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடு 12 சதவீதம் அதிகரிக்கும் என 360 ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அறிக்கைகள் கூறுகின்றன.

இந்த ரியல் எஸ்டேட்டில் செய்யும் முதலீடு இந்தியாவில் வீடு கட்டுவதற்கான வசதியை பெறுவதை உறுதி செய்வதாக உள்ளது.

துபாயில் முதலீட்டு திருவிழா...

ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்வது உலகம் முழுவதும் விரும்பப்பட்டு வருகிறது. இது ஒருவரது வாழ்க்கையில் முதலீடாகவும், முக்கிய மைல்கல்லாகவும் கருதப்படுகிறது.

எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு குடியிருப்பை உறுதி செய்யும் வகையிலும், பிற்காலத்தில் ஏற்படும் பணத்தட்டுப்பாட்டை நீக்க மதிப்புமிக்க சொத்து வைத்திருப்பதையும் உறுதி செய்ய ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்வது சிறந்த ஒன்றாகும்.

ரியல் எஸ்டேட் முதலீடு என்பது இந்தியாவில் ஒரு குடியிருப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சமூக பாதுகாப்பையும் அளிப்பதாக உள்ளது.

இதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் தங்கள் முதலீடுகளை எளிதாக்குவதற்கும் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை தளர்த்தி உள்ளது கூடுதல் சிறப்பாகும்.



Next Story